கதாநாயகன், வில்லன் என தனக்கு கிடைக்கும் கதாபாத்திரம் எதுவானாலும் தன்னுடைய முழு நடிப்புத்திறனை வெளிப்படுத்தி மக்களை கவர்கிறார் விஜித்.
திரைப்படங்கள், நாடகத் தொடர்கள், இணைய காணொளி தொடர்கள் என கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆல் ரவுண்டராக வலம் வரும் இவர் கைவசம் பல திரைப்படங்கள் இருக்கின்றன. அவை அடுத்தடுத்து வெளியாகி விஜித்தின் புகழ் வெளிச்சத்தை உயர்த்த காத்திருக்கின்றன!