‘டூ லெட்’ படத்தில் நடித்த சந்தோஷ் நம்பிராஜன், பின்னணிக் குரல் கலைஞர் ரவீனா ரவி நடித்து, வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘வட்டார வழக்கு.’
இந்த படத்தில் விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
மதுரை மேற்கில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, பகை, காதல், கோபம், வெறுப்பு, கொலை, வழக்கு என்ற பல பரிமாணங்களுடன் உருவாகியுள்ளது.
இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமா காணாத காதல் காட்சிகள் போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல், காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த ஒரு புதுவிதமான காதல் உணர்வை காட்டுகிறார் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.
1985-ம் ஆண்டில் நடக்கின்ற கதையில் 1962-ம் வருடத்தில் நடப்பதுபோல் ஃபிளாஷ்பேக் எடுக்க ஒரு இடம் தேவைப்பட்டது. அப்போது ஒரு மேற்கு மதுரையில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமம் எத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் அதே பழமையுடன் இருப்பது தெரியவந்தது. அங்குபோய் எடுத்தோம். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படத்தில் இடம்பெறும் ஒரு கால் மணி நேர விறுவிறுப்பான காட்சிகள் பல திருப்புமுனைகளை கொண்டதாக இருக்கும்’ என்கிறது படக்குழு.
படத்தை ‘சக்தி ஃபிலிம் சிக்நேச்சர்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது.
படக்குழு:-
ஒளிப்பதிவு: ‘மூடர் கூடம்’ டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன்
படத்தொகுப்பு: வெங்கட்ராஜன்