Thursday, July 18, 2024
spot_img
HomeCinemaநடிகர் விஜய் விஷ்வாவுக்கு, கம்போடியா உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் ஒளிரும் நட்சத்திரம் விருது வழங்கி...

நடிகர் விஜய் விஷ்வாவுக்கு, கம்போடியா உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் ஒளிரும் நட்சத்திரம் விருது வழங்கி பாராட்டு!

Published on

கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில் இரண்டாம் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

ஜெர்மன் ஹம் நகரில் உள்ள காமாட்சி அம்மன் தலைமை ஆதீனம் சிவ ஸ்ரீ பாஸ்கர குருக்கள்,ஆஸ்திரேலிய எழுச்சிக் கவிஞரும் சிறை அதிகாரியுமான ரவிச்சந்திரன்,ஆசிரியையும் வானொலி ஒலிபரப்பாளருமான சாரதா ரவிச்சந்திரன்,சமூக செயற்பாட்டாளர் நாவலூர் முத்து, தொல் ஆய்வாளர் சுகவனம், புலவர் நந்திவர்மன், டாக்டர் வாசுகி சித்திரசேனன், அகிலன் ஆகியோருடன் தமிழ் நடிகர் விஜய் விஷ்வா கலந்து கொண்டார்.

விழாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டது. பாடலை பாடியவர் வேல்முருகன். கேவி மீடியாஸ் சார்பில் டாக்டர் பி.செந்தில் நாதன் தயாரித்திருந்தார். ஞானம், சீனு ஒருங்கிணைத்துள்ளனர். ஜி கே வி இசையமைத்துள்ளார். கவிஞர் தாமரை பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

தனது கம்போடியப் பயண அனுபவம் பற்றி நடிகர் விஜய் விஷ்வாவிடம் கேட்டபோது, நான் கம்போடியா சென்று அங்குள்ள மண்ணையும் மக்களையும் பார்க்கும்போது எனக்கு நமது தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. கடல் கடந்து நம் தமிழர்கள் சென்று பரப்பிய பண்பாட்டை அங்கே பார்க்க முடிந்தது.

ஒரு சுற்றுலாவாக அங்கோர்வாட் சென்று அங்குள்ள கோயில்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நமது தமிழ் மன்னர்கள் அமைத்த கோயிலைக் கண்டு ஒரு புறம் பெருமையாகவும் அதன் சிதைவுகளைக் கண்டும் அதன் மீது வேறொரு பண்பாட்டுச் சின்னங்களை நிறுவ முயன்று இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாகவும் இருந்தது.

கம்போடிய மக்கள் மிகுந்த மரியாதை தருபவர்கள். பொறுமையானவர்கள். அவர்கள் நம்மிடம் பழகும் போது அவர்களது பண்பாட்டை அறிய முடிந்தது.

கம்போடியாவிலுள்ள தமிழ்ச் சான்றோர்கள் கம்போடிய அரசின் தலைமை அலுவலகத்தில் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உள்ளனர். கம்போடியப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கவிஞர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தியதில் கம்போடியாவில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஞான சேகரன், சீனிவாச ராவ், தாமரை சீனிவாசராவ் ஆகியோர் ஆற்றிய பணி அறிந்து பெருமையாக இருந்தது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் வாழ்த்தினாலும் தகும்.

கம்போடிய மண்ணையும் மக்களையும் பார்க்கும்போது நமது மக்களைப் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது.

கவிஞர்கள் மாநாட்டில் மொழி தெரியாவிட்டாலும் கூட நமது மொழியை மதித்து பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாகவும் பொறுப்பாகவும் அமர்ந்திருந்து கண்டு களித்தது மகிழ்ச்சியாக இருந்தது .அது நமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் தரக்கூடிய மரியாதையாகவும் இருந்தது. எனக்கு ஒளிரும் நட்சத்திரம் விருது வழங்க கௌரவித்தார்கள்” என்றார்.

குறிப்பு:- கம்போடியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் 2000 ஆண்டுகாலப் பாரம்பரியத் தொடர்பு உண்டு.வாணிபத் தொடர்பு வழியாகச் சென்று கலந்த தமிழர்களின் நாகரிகம் பண்பாடு போன்றவற்றின் தாக்கம் கம்போடியாவில் இன்றும் உண்டு.
அங்கும் தமிழர்கள் வசிக்கிறார்கள்; தமிழ்க் கலைகளைக் கொண்டாடுகிறார்கள். அதன் ஓர் அம்சமாக கம்போடியாவில் இரண்டாம் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நடைபெற்றது.

Latest articles

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் தீபாவளியன்று ரிலீஸாகிறது!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்' வரும் அக்டோபர் 31; 2024 தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்திய...

More like this

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...