நடிகர் விஜய் கௌரிஷ் கதைநாயகனாக நடிக்கும் ‘வெள்ளி மேகம்’ படத்தின் பூஜை கடந்த வாரம் நடந்தது. படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி நடக்கவுள்ளது.
விஜய் கௌரிஷ் ‘பார்’, ‘பியார்’, ‘ரத்த சங்கிலி’ உள்ளிட்ட பல குறும்படங்களிலும், அமலாபால் நடித்த ‘கடாவர்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய பிரபுதேவாவின் ‘பகீரா’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வெற்றி நடித்த ஜோதி’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து கவனிக்க வைத்தார்.
அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் ‘ஸ்டார்ட் கேமரா ஆக்சன்’ என்ற படத்தில் ‘டூலெட்’ பட ஹீரோ சந்தோஷ் தம்பிராஜனுடன் இணைந்து முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் ராஜீவ் மேனனின் உதவியாளர் எஸ்.எஸ்.முருகராசு முதன்முறையாக இயக்கியுள்ள பெயரிடப்படாத படத்திலும் விஜய் கெளரிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
இப்படி கதையம்சமுள்ள பல படங்களில் தொடர்ந்து நடித்துவரும் விஜய் கௌரிஷ், ‘‘நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்விப்பதே தனது நோக்கம்” என்கிறார்