இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த வேலம்மாள் நெக்சஸ் விளையாட்டு வீரர்களை 416 பேரை பாராட்டும் நிகழ்ச்சி இன்று சென்னை வேலம்மாள் ஹாலில் மிகச் சிறப்பாக நடந்தது.
விளையாட்டுத் துறையில் மாணவர்களின் பங்களிப்பை கொண்டாடும் விதமாகவும், வேலம்மாளின் விளையாட்டு முன்னேற்றக் கொள்கைகளை வலியுறுத்தும் விதமாகவும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி. துளசி மதி, பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்), திருமதி. மணிஷா ராமதாஸ், பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்), திருமதி. நித்யா ஸ்ரீ சிவன், பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்), திரு. அபய் சிங், இந்திய ஸ்குவாஷ் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்), திரு. கிருபாகரராஜா, செயலாளர், (தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம்) ஆகியோர் பங்கேற்றனர்.
வேலம்மாள் நெக்சஸ் 2025-26 கல்வியாண்டுக்காக ₹2.55 கோடி மதிப்புள்ள விளையாட்டு உதவித்தொகைகளை அறிவித்தது. தமிழ்நாட்டை தேசிய விளையாட்டுகளில் பிரதிநிதித்துவம் செய்வதற்காக ₹30 லட்சம் மதிப்புள்ள விமான பயண செலவுகளுக்கான நிதியுதவியையும் வழங்கியுள்ளது.
வேலம்மாள் நெக்சஸ் தங்கள் சிறந்த ஐந்து உடற்தகுதி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து புதிய கார்கள் வழங்கியது. இந்த புரட்சிகரமான நடவடிக்கை, விளையாட்டு திறமைகளை வளர்ப்பதில் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
வேலம்மாள் நெக்சஸ், அர்ஜுனா விருதுபெற்ற ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ₹3 லட்சம் மதிப்புடைய காசோலை வழங்கி அவர்களை சிறப்பாக பாராட்டியது.
நிகழ்வின் சிறப்பம்சமாக, வெலம்மாள் மேட்ரிக் பள்ளியின் மாணவரும், சர்வதேச பேட்மின்டன் வீரருமான ரெதின் பிரணவ் பங்கேற்று பாராட்டப்பட்டார். அவரது சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பு, இளம் விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்தது.
வேலம்மாள் நெக்சஸ் கரஸ்பான்டென்ட் எம் வி எம் வெல்மோகன் கலந்து கொண்டு, அனைத்து விளையாட்டு வீரர்களையும் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டி, அவர்களின் எதிர்கால வெற்றிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த விழா, விளையாட்டு திறமைகளை வளர்ப்பதற்கும், அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பதற்கும் வெலம்மாள் நெக்சஸ் மேற்கொள்ளும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.