Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaஹரி ஹர வீரமல்லு படத்தில் பவன் கல்யாண் பாடிய 'கேக்கணும் குருவே' தத்துவப் பாடல் வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பவன் கல்யாண் பாடிய ‘கேக்கணும் குருவே’ தத்துவப் பாடல் வெளியீடு.

Published on

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேக்கணும் குருவே’ பாடல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கி.பி 16-ம் நூற்றாண்டின் முகலாயர்கள் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட உணர்வுப்பூரமான இந்த தத்துவப் பாடலானது அனைத்து வயதினரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு உலகளாவிய கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டிருக்கிறது.

ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவான இந்த ஹரி ஹர வீரமல்லு படம், முகலாயப் பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதை. நம் இந்திய வளங்களையும் நிலப்பரப்புகளையும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நம் நாட்டிற்குள் படையெடுத்து வந்த டச்சுக்காரர்களயும் மற்றும் போர்த்துகீசியர்களையும் எதிர்த்து ஓடவிட்ட ஒரு மாவீரனின் கதை தான் இந்த ஹரி ஹர வீரமல்லு.

ஹரி ஹர வீரமல்லு படத்தின் ஒரு முக்கியமான தருணத்தில், இயற்கை சூழ்ந்த அடர் காடுகளின் பின்னியில், “கேக்கணும் குருவே” என்ற இந்த தத்துவப்பாடலானது அமைக்க்ப்பட்டிருக்கிறது, தெலுங்கு சினிமாவின் முக்கிய ஆளுமையான “பவர் ஸ்டார்” பவன் கல்யாண், தனது வீரர்களுடன் சேர்ந்து, இரவு நேரத்தில் ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கி, அங்கு ஒரு வலிமையான சவாலை எதிர்கொள்ளும் போது ஏற்படும் உனர்ச்சிக் கொந்தளிப்புகளின் இடையே , வீரர்களுக்கு உத்வேகம் கொடுக்கும விதமாக இந்த ஆத்மார்த்தமான பாடலான “கேக்கணும் குருவே” பாடல் இடம்பெற்றுள்ளது.

பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய முத்தாய்ப்பான பாடல் வரிகளின் தமிழ்ப் பதிப்பில், தத்துவார்த்தத கருத்துகள் கூட அழகியலாக மாறியுள்ளன. பாடலின் தீம் மற்றும் அது சொல்ல வரும் கருத்தினால் வெகுவாக ஈர்க்கப்பட்ட நடிகர் பவன் கல்யாண், தனது சொந்தக் குரலிலேயே தெலுங்கு பதிப்பில் பாடியுள்ளார். மேலும் மற்ற மொழிகளிலும் கூட இவரது குரலே, மேம்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது, பவன் கல்யாணின் குரலில் உள்ள தனித்தன்மையானது, உலகளாவிய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் இசையால் இந்தப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது, நம்மை புரட்சித்தலைவர் எம் ஜி ஆரின் தத்துவப்பாடல்களை நினைவூட்டும்.

இந்த படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவும், தோட்ட தரணியின் புரொடக்சன் வடிவமைப்பும், ஹரி ஹர வீரமல்லு படத்தை ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக காட்டும் என்பது உறுதி.

‘கேக்கணும் குருவே’ என்பது வெறும் பாடல் அல்ல; இது தத்துவ உள்நோக்கம், சாகசம் மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தை பறை சாற்றும் ஒரு பெருமிதம். ஹரி ஹர வீரமல்லுவின் பிரமாண்டமான கதையை முழுமையாக்கும் அதே வேளையில் பாடல்களும் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!