‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வா வரலாம் வா.’ தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைக்கும் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக ‘மைம்’ கோபி நடித்துள்ளனர். அவர்களோடு சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், ‘போண்டா’ மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிக்கும் இந்த படத்தை எல்.ஜி. ரவிசந்தர், எஸ்பிஆர் இணைந்து இயக்கியுள்ளனர்.
40 குழந்தைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் எஸ்.ஜி,எஸ் கிரியேட்டிவ் மீடியா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.