Monday, February 10, 2025
spot_img
HomeCinemaவடக்கன் படத்துக்காக ‘தேனிசைத் தென்றல்' தேவா பாடிய பாடல்! விரைவில் இசை வெளியீட்டு விழா.

வடக்கன் படத்துக்காக ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடிய பாடல்! விரைவில் இசை வெளியீட்டு விழா.

Published on

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு உணர்வுபூர்வமான, நகைச்சுவை கலந்த, பொழுது போக்கு படைப்பாக ‘வடக்கன்’ என்ற படம் உருவாகியுள்ளது.

எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கியிருக்கும் படம் இது.

கூத்துப் பட்டறை மாணவரான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும் நடிக்க அவர்களுடன் புதுமுகங்கள் பலரும் நடிக்கிறார்கள்.

கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், வெஸ்டர்ன், க்ளாஸிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், தனிப் பாடல்கள் மற்றும் இசைஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான எஸ் ஜெ ஜனனி இசையமைக்கிறார்.

அவரது இசையில், படத்தின் முக்கியமான பாடலை கவிஞர் ரமேஷ் வைத்யா எழுத, அந்த பாடலை ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடினார். காட்சியின் ஆன்மாவைக் கடத்தும் இசையையும், அதற்கு ஒத்திசைந்து உயிரூட்டும் பாடல் வரிகளையும் உருவாக்கிய இசையமைப்பாளர் ஜனனியையும், கவிஞர் ரமேஷ் வைத்யாவையும் மனதாரப் பாராட்டினார்.

புத்தகப் பதிப்புத் துறையில் புகழ் பெற்று விளங்கும், முன்னணிப் பதிப்பாளர் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் முதல் முறையாக தயாரித்துள்ள படம் இது.

அழகர்சாமியின் குதிரை, மேற்குத் தொடர்ச்சி மலை, தரமணி, பேரன்பு, கர்ணன், நண்பகல் நேரத்து மயக்கம், மாமன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் வடக்கன் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதையடுத்து விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.

Latest articles

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடந்தது!

அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது....

More like this