ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ள, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘வேதா சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படம் ஒரு உறுதியான தலித் பெண்ணின் பயணத்தை விவரிக்கிறது. சாதி அடிப்படையிலான அநீதிகள் மற்றும் குற்றங்களின் அழுத்தமான பிரச்சினைகளைத் தைரியமாகப் பேசுகிறது.
ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் அக்டோபர் 10-ம் தேதியிலிருந்து தசரா பண்டிகை கொண்டாட்டமாக ZEE5 தளத்தில் ஸ்டிரீமாகவுள்ளது.