Thursday, March 27, 2025
spot_img
HomeCinemaஉற்சாகமாய நடந்த நடிகர் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கொடி அறிமுக விழா!

உற்சாகமாய நடந்த நடிகர் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கொடி அறிமுக விழா!

Published on

‘தளபதி’ விஜய் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டு படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்துள்ளார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.

கட்சியை துவங்கும் முன்னதாக பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். பின்னர் அது தற்போதுள்ள கட்சி யாக கட்டமைக்கப்பட்டது. கட்சியை துவங்குவதற்கு முன்னர் தனது இயக்கம் சார்பில் பல்வேறு நற்பணிகள் செய்து வந்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2023-ஆம் ஆண்டும், இந்த ஆண்டு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக  சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்   படுத்தினார்.

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடிப் பாடல்  அறிமுக விழா தலைவர் ‘தளபதி’ விஜய் அவர்கள் தலைமையில் இன்று (22-08-2024) காலை நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் ‘தளபதி’விஜய் வந்தவுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் வரவேற்புரையாற்றினார். பின்னர் ‘தளபதி’விஜய் அவர்களுடன் சேர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கழகக் கொடியை அறிமுகம் செய்து விட்டு, தலைமை நிலையச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள கம்பத்தில் கொடியை ‘தளபதி’விஜய்
தனது பொற்கரங்களால் ஏற்றி வைத்தார்.

பின்னர் கழகக் கொடிப் பாடல் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து கழகத்தின் தலைவர் ‘தளபதி’ விஜய்  தலைமையுரையாற்றி, இவ்விழாவிற்கு வந்து வாழ்த்திய தனது தாய், தந்தையருக்கும் மற்றும் விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் வந்திருந்த அனைவரும் மதிய உணவு சாப்பிட்டு செல்லுமாறு அன்பான வேண்டுகோள் வைத்தார்.

கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திருமதி.தாஹிரா நன்றியுரை ஆற்றினார்.

Latest articles

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

நடிகர் ராம்சரண் _ இயக்குநர் புச்சிபாபு சனா இணையும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், தேசிய விருது பெற்ற 'உப்பென்னா' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெடி' (PEDDI)...

More like this

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...