‘விடுதலை’, ‘கருடன்’ என சூரி கதையின் நாயகனாக நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தை ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.
சூரி, பிரசாந்த் பாண்டியராஜ், லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் இணைந்திருப்பதால் இந்த திரைப்படமும் பிரமாண்டமான வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உருவாகியுள்ளது.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் தெரியவரும்.