தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை வைத்து ஹாரர் படமாக உருவாகவிருக்கிறது ‘யூ ஆர் நெக்ஸ்ட்.’
கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கேபிஒய் வினோத், ரஃபி, புல்லட்’ சமி உள்ளிட்டோர் நடிக்க, ஷரீஃப் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
![]() இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியபோது,”இந்த படத்தின் கதை வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. இந்த படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.
ரக்சிதா மகாலட்சுமி, ”இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. இது உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும்” என்றார்.
இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி இணைந்து தயாரிக்கின்றனர்.
படக்குழு:- கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் பணியாற்றுகின்றனர். வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ‘கலைமாமணி’ ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கின்றனர்.
|
பான் இந்திய ஹாரர் படைப்பான ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தில் நடிக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி! பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு.
Published on
