Tuesday, March 10, 2026
spot_img
HomeMovie Review'டெஸ்ட்' சினிமா விமர்சனம்

‘டெஸ்ட்’ சினிமா விமர்சனம்

Published on

தியேட்டர்களுக்கு போகாமல் நேரடியாக Netflix தளத்தில் வெளியாகியிருக்கிற படம்.

அறிவியல் ஆராய்ச்சியாளர் சரவணன், தான் கண்டுபிடித்த மாற்று எரிபொருளுக்கு அரசின் அங்கீகாரம் பெறுவதற்கு கோடிக்கணக்கான பணத்தை புரட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்.

சரவணனின் மனைவி குமுதா திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாத நிலையில் வெறுப்பின் உச்சத்திலிருக்கிறார். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கு தயாராகிறார். அதற்கு தேவையான பணம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

கிரிக்கெட் வீரர் அர்ஜுன், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் போட்டியில், சூதாட்டக்காரர்களின் மிரட்டலால் தோற்க வேண்டிய நிர்பந்தத்திலிருக்கிறார்.

இந்த மூன்று பேரும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதும் அதன் விளைவுகளுமே ‘டெஸ்ட்’டின் திரைக்கதை…

பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வில்லன் அவதாரம் எடுக்கும்போது மிரட்டலான நடிப்பையும், குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமாக இருக்கிற தன்னைத்தானே நொந்து கொள்கிறபோது விரத்தியின் பிரதிபலிப்பையும் அழகாக கடத்தியிருக்கிறார் சரவணனாக வருகிற மாதவன்.

குழந்தையில்லாத ஏக்கம், கணவரின் குற்றச் செயலை தடுக்கிற வேகம், தன் பிரச்சனையைத் தீர்க்க பணம் கிடைக்குமென்றால் கணவனின் குற்றச் செயலுக்கு ஆதரவு தர முடிவெடுத்தல் என நடிப்பில் கலவையான உணர்வுகளை கொட்டிக் குவித்திருக்கிறார் குமுதாவாக வருகிற நயன்தாரா.

மிரட்டலுக்கு பயந்து விளையாட்டில் தோற்றால் அது தேச துரோகம்; தோற்காவிட்டால் மகனை இழக்க வேண்டியிருக்கும். இப்படியான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிற உணர்வை மிகச்சரியாக தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் அர்ஜுனாக வருகிற சித்தார்த்.

வெகு நாட்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் மீரா ஜாஸ்மின், சித்தார்த்தின் மனைவியாக மகிழ்ச்சி, கவலை, பரிதாபம் என கதைக்கேற்ப உணர்வுகளை சரியாகத் தந்திருக்கிறார்.

சித்தார்த்தின் மகனாக வருகிற சிறுவனின் நடிப்பு படத்தின் பலம். காளி வெங்கட் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பும் நிறைவு.

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். பாடல்களை ரசிக்கும்படி கொடுத்து, பின்னணி இசையை படத்தின் விறுவிறுப்புக்கு துணையாக்கியிருக்கிறார்.

கிரிக்கெட் போட்டிகளின் பிரமாண்டத்தை நகலெடுத்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வீரஜ் சின்கோஷில்.

கட்டாயம் என்று வருகிறபோது எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகிறவர்கள், எந்த நிலையிலும் மனம் தடுமாறாமல் நிற்கிறவர்கள் என ஆளாளுக்கு வேறுபடுகிற மனிதர்களின் மனநிலையை மையப்படுத்தி, பரபரப்புக்கு குறையில்லாமல் தனது முதல் படத்தை இயக்கியிருக்கிற ஒய் நாட் ஷசிகாந்த், அடுத்தடுத்த படங்களை இதைவிட பலமடங்கு சிறப்பாக தருவார் என நம்பலாம்.

டெஸ்ட் _ வெற்றிகரமான ‘சோதனை’ முயற்சி!

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!