மேலே ஆகாயம் கீழே பாதாளம்… சன்னிலியோனின் அட்டகாசமான நடனத்துடன் ‘தீ இவன்.’ விரைவில் திரையரங்குகளில்…

0
37

சன்னி லியோன், நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகும் படம் ‘தீ இவன்.’ ஜெயமுருகன் இயக்கும் இந்த படத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், ‘கார்த்திகை தீபம்’ அத்திகா, சுகன்யா, சேது அபிதா, ‘மஸ்காரா’ அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி, சரவண சக்தி, சுமன்.து, ஹேமந்த், ஸ்ரீதர், ‘சாரப்பாம்பு’ சுப்புராஜ், கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

படத்தில் சன்னி லியோனியின் ‘மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்’ என்ற குஷியான பாடலும் நியூ ஸ்டார் சுமனின் ‘ரைட்டும் ஓடுது ஓன் வேயில் ராங்கும் ஓடுது’ என்ற பாடலும், ‘காலில் சலங்கைகட்டி காஞ்சிபுரம் பட்டுகட்டி’ என்ற செந்தில் ராஜலட்சுமியின் குத்துப்பாடலும் கண்ணுக்கு இதமாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் சிவகுமார் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை பார்த்துவிட்டு, ‘‘அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நம் மண்ணின் கலாச்சாரத்தை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த படமும் உறுதியாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள்” என்று பாராட்டியிருக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் ஜெயமுருகன் பேசியபோது, ‘‘பராசக்தி, மாமன்னன், விடுதலை படவரிசையில் சமூக பார்வை கொண்ட படம் இது. நவரச நாயகன் கார்த்திக் நவரசங்களையும் கொட்டியிருக்கிறார்.

இந்த படம் ஆழமான கலாச்சாரத்தை சொல்லும் விதத்தில் உருவாகிறது. ஆம்பள கெட்டா வாழ்கைபோச்சு பொம்பள கெட்டா வம்சமே போச்சு என்று சொல்வார்கள் அதன்படி ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆணோ, பொண்னோ கலாச்சாரம் மீறி படி தாண்டி விட்டால். அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல அவர்கள் சந்ததியையே சமாதி ஆக்கிவிடும் என்பதையும், தாலிகட்டாம தாயாவதும், தாலிகட்டாம தாரமா வாழ்வதும் தரங்க கெட்ட செயல் என்றும் சொல்வார்கள். அதுபோல முறையற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வு மட்டுமல்ல அவர்களின் சந்ததிகளின் வாழ்வும் எப்படி சீரழிந்து சின்னா பின்னமாகிறது என்பதையும், ஆள்பவர்கள் மட்டுமல்ல வாழ்பவர்களும் நல்லவர்களாக இருந்தால் தான் நல்ல சமூகம் படைக்க முடியும் என்ற சமூக நீதியையும் சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைத்துள்ளோம்” என்றார்.

படம் பற்றி சக்தி பிலிம்ஸ் திருப்பூர் சுப்பரமணியம் பேசியபோது, ‘‘நான் இந்த படம் பார்த்தேன். மிக அற்புதமான பேமிலி ஸ்டோரி. கார்த்திக்கும், சுகண்யாவும் இணைந்து நடித்துள்ளனர். சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாக எடுத்துள்ளார்கள். கார்த்திக் மிரட்டியுள்ளார். திருப்பூரை சேர்ந்த தம்பி சுமன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதே போல் வில்லன் நடிகர் ஸ்ரீதர் அசத்தியிருக்கிறார்.
பாடல்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது. பொதுவாகவே ஜெயமுருகன் அவர்கள் படம் என்றால் ரோஜா மலரே ஆகட்டும் அதற்க்கு முன் பின் வந்த படங்களாகட்டும் பாடல்கள் சிறப்பாக இருக்கும், மற்றொரு சிறப்பு அவரை பாட்டுக்காரர் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகச்சிறப்பாக பாடல்கள் தருவார். ஒரு பாட்டிற்கு சன்னிலியோனை ஆடவைத்து மிகப் பெரிய செலவில் பிரமாண்டமாய் செட்டு போட்டு படமாக்கியுள்ளார்கள்.

படக்குழு:-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜெயமுருகன். T. M
ஒளிப்பதிவு – ஒய் என் முரளி
படத்தொகுப்பு – மொகமத் இத்ரிஸ்
பின்னணி இசை – ஏ ஜெ அலி மிர்ஸா
தயாரிப்பு மேற்பார்வை – எம். அப்பு
மக்கள் தொடர்பு – மணவை புவன்

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here