நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடுவதற்காக ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர்.
கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக திரையிடப்பட்டது. ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார். இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்றத் தலைவரும், மேலாளருமான சூரிய நாராயணன் ஒருங்கிணைத்திருந்தார்.
துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்- காளமாடன்’ படத்தில் நடித்து வருகிறார்.