தளபதி விஜய் நடிக்கும் 69-வது படத்தை எச் வினோத் இயக்கவிருக்கிறார். விஜய் இதற்கு முன்பு பார்த்திராத தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா தனது நிறுவனமான ‘கே வி என் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜெகதீஷ் பழனிசாமி, லோகித் என்.கே இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ என விஹய் நடித்த நான்கு படங்களுக்கு இசையமைத்து, வெற்றிப் பாடல்களைத் தந்த அனிருத் விஜய்யுடன் ஐந்தாவது முறையாக இணைகிறார்.
படப்பிடிப்பு வரும் அக்டோபரில் துவங்கி, படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகவுள்ளது.
தளபதி விஜய், வெற்றிப் பட இயக்குநர் எச்.வினோத் முதன்முறையாக இணைவதால் இந்த படம் அசத்தலான சினிமா அனுபவம் தருமென்பது உறுதியாகிறது.