Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaசிறந்த நடிகையாக தேர்வான நித்யா மேனன்... இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!

சிறந்த நடிகையாக தேர்வான நித்யா மேனன்… இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!

Published on

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம்.

சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கூலி’ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் ஆகும்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படத்தில் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. 70-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில், இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடன இயக்கம் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பன்மொழி நடிகையான நித்யா மேனன் தனது தலைசிறந்த நடிப்பின் மூலம் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை பதிவு செய்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

மாபெரும் வெற்றி கூட்டணியான  தனுஷ் மற்றும் அனிருத் இணை நீண்ட நாட்களுக்கு பிறகு இத்திரைப்படத்தில் மீண்டும் சேர்ந்து சிறந்த வெற்றிப் பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தளித்திருந்தனர். ‘தாய்க்கிழவி’, ‘மேகம் கருக்காதா’ உட்பட அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. இப்பாடல்களுக்கு நடன இயக்குனர்களாக சதீஷ் கிருஷ்ணன் மற்றும் ஜானி பணியாற்றியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடன இயக்குனர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்களும் படக்குழுவும் மிகுந்த உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!