Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaஎன்னுடைய திரைமொழி வடிவம் சிக்கலானது என்றாலும் இந்தப் படத்தில் எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறேன்.! -தங்கலான் படத்தின்...

என்னுடைய திரைமொழி வடிவம் சிக்கலானது என்றாலும் இந்தப் படத்தில் எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறேன்.! -தங்கலான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு

Published on

பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 14 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசியபோது, ”தங்கலான் யார்? தங்கலான் படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ? தங்கலான் எப்படி இருக்கும்? என்பதை பற்றி இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியானதும் பார்வையாளர்களிடத்தில் ஒரு விதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும்.‌ அதே தருணத்தில் பா ரஞ்சித்தின் படம் என்பதால் எந்த வகையான அரசியல் இருக்கும்? என்பது குறித்தும் நீங்கள் யூகித்திருப்பீர்கள்.

இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு தான் என்னை நானே தேடத் தொடங்கினேன். நான் ஒரு வரலாற்றுப் பயணி என நினைத்துக் கொள்கிறேன்.‌
தங்கலான் படத்தின் போது தான் என்னை நானே சரியாக புரிந்து கொள்ள முடிந்தது. என் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நான் யார்? என என்னை நானே தேடிக் கொண்டிருக்கிறேன்.

நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பதை பற்றியும், மக்களிடத்தில் என்ன மாதிரியான விவாதங்கள் எழ வேண்டும் என நான் தீர்மானிக்கிறேன் என்பதையும் மையமாகக் கொண்டுதான் என் படைப்புகள் உருவாகிறது. தங்கலான் படத்தின் மூலம் நான் என்னை நானே புரிந்து கொண்டு, வரலாற்றுப் பயணியாக பயணிக்கிறேன்.

தங்கலான் படத்தில் தங்கலானுக்கும் அவருடைய சமூக அரசியலுக்கும் இடையேயான புரிதலை விவரித்து இருக்கிறேன். தங்கலான் தான் யார்? என்பதை தேட தொடங்குவதன் ஊடாக விடுதலையை எப்படி அடைகிறார் என்பதும் இடம் பிடித்திருக்கிறது. இதை என்னுடைய திரை மொழி வடிவத்தில் சொல்லி இருக்கிறேன். என்னுடைய திரை மொழி வடிவம் சிக்கலானது என்றாலும்..‌ இந்தப் படத்தில் எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறேன்.‌

தமிழ் திரையுலக ரசிகர்கள் எப்போதும் முற்போக்கான விசயங்களுக்கு ஆதரவை வழங்குவார்கள்.‌ தமிழ் ரசிகர்கள் வணிக படம் கலை படம் என்னை பிரித்துப் பார்த்து ஆதரிப்பதில்லை. அவர்கள் அனைத்தையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தான் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதனால்தான் என்னுடைய படங்களில் நான் பேசும் அரசியலை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறார்கள். நான் பேசும் கருத்தியலில் முரண் இருக்கலாம். ஆனால் என்னுடைய திரை மொழியை வரவேற்கிறார்கள்.‌ தொடர்ச்சியாக அவர்கள் அளித்து வரும் ஆதரவினால் தான் நான் தங்கலானை உருவாக்கி இருக்கிறேன். அத்துடன் ரசிகர்களுக்கு தங்கலான் ஒரு புது அனுபவத்தை வழங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் இந்த தங்கலான் புதிய அனுபவத்தை அளிக்கும். ” என்றார்.

விக்ரம் பேசியபோது, ”இந்தப் படத்திற்காக இயக்குநர் பா. ரஞ்சித் கடினமாக உழைத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியை உருவாக்கும் போதும் அதனை படமாக்கும் போதும் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கடின உழைப்பை என்னால் உணர முடிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்தாலும் படைப்பிற்கு என்ன தேவையோ அதனை நட்சத்திரக் கலைஞர்களிடமிருந்து பெறுவதில் உறுதியாக இருந்த விதம் என்னைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இதில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் எந்த படத்திலும் எளிதாக நடிக்க கூடிய அளவிற்கு பயிற்சியை வழங்கியிருக்கிறார். எங்கள் அனைவரையும் திறமை வாய்ந்த நட்சத்திரமாக மாற்றியிருக்கிறார்.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் அற்புதமான இசையமைத்த இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் கடின உழைப்பிற்காக சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க விருதை பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

 

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!