Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaநகுல் ஹீரோவாக நடிக்கும் ‘டுடே ஸ்பெஷல்' பூஜையுடன் துவக்கம்!

நகுல் ஹீரோவாக நடிக்கும் ‘டுடே ஸ்பெஷல்’ பூஜையுடன் துவக்கம்!

Published on

நகுல் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘டுடே ஸ்பெஷல்.’

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான திருமலை இந்த படத்தை இயக்குகிறார். பிரபல நாயகி ஒருவரும், கூல் சுரேஷும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கிறது படக்குழு.

படத்தை ‘டி.கிரியேஷன்ஸ்’ சார்பில் எம். திருமலை மற்றும் ஜெசிகா இருவரும் இணைந்து வழங்குகின்றனர்.

இந்த படத்தின் துவக்க விழா ‘டி.கிரியேஷன்ஸ்’ அலுவலகத்தில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன் நகுல், நாயகி அர்த்தனா பினு, நய்னா சாய், ரவிமரியா உள்ளிட்டோருடன் மகேந்திரகுமார், நாகர், காபர் அலி, பி.ஆர். சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘டுடே ஸ்பெஷல் நான் இதுவரை இயக்கிய படங்களில் முற்றிலும் மாறுபட்டு, முழுவதும் வேறுபட்டு இன்றைய சமூக அவலங்களை களைவது பற்றிய கமர்ஷியலான அனைத்து தரப்பும் விரும்பும் வகையிலான படமாக இருக்கும். படத்தின் விரிவான கதையை விரைவில் மக்களுக்கு தெரியப்படுத்துவேன். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது” என்றார்.

திருமலை ‘தி.நகர்’, ‘காசேதான் காசேதான் கடவுளடா’, ‘அகம்புறம்’, ‘மான் வேட்டை’ ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கியவர்; ‘நெல்லை சந்திப்பு’ படத்தை தயாரித்தவர்.

படக்குழு:-
ஒளிப்பதிவு – ஒய்.என். முரளி
இசை – சித்தார்த் விபின்
வசனம் – வேலு சுப்ரமணியம்
படத்தொகுப்பு – சந்துரு
நடனப் பயிற்சி – கந்தாஸ், பாபி
சண்டைப் பயிற்சி – ‘ஸ்டண்ட்’ சிவா
மக்கள் தொடர்பு – விஜயமுரளி, நித்தீஷ் ஸ்ரீராம்

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!