Tuesday, January 20, 2026
spot_img
HomeCinemaஅனுமன் வெற்றிப்பட ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது!

அனுமன் வெற்றிப்பட ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது!

Published on

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா சமீபத்தில் வெளியான ‘ஹனுமன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் இணைகிறார். அந்த புதிய படத்தினை டோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. படத்தின் தலைப்பு ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பு போஸ்டரில் தேஜா சஜ்ஜா முகத்தில் தீவிரமான முக பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார். அவரது முந்தைய படத்தில் பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி சூப்பர் யோதாவாக அசத்துகிறார்.

ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் இரண்டாவது திரைப்படம் இது. ஈகிள் படம் போலவே இந்த படமும் புதிய வரலாறு படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அற்புதமான திரைக்கதை வல்லுநரான கார்த்திக் கட்டம்நேனி, இது சூப்பர் யோதாவின் சாகசக் கதையில், தேஜா சஜ்ஜாவை பிரமாண்டமாக காட்டவுள்ளார்.

இந்திய அளவில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளதால், படம் உலகளாவிய தரத்துடன் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் என்பது உறுதியாகிறது.

தேஜா சஜ்ஜாவின் கடந்த படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை குவித்ததால், அவரது அடுத்த படத்தின்மீது எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.

படக்குழு:
இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி தயாரிப்பாளர்: பீப்பிள் மீடியா ஃபேக்டரி TG விஸ்வ பிரசாத்
இணை தயாரிப்பாளர்: விவேக் குச்சிபோட்லா
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: கிருத்தி பிரசாத்
நிர்வாகத் தயாரிப்பாளர் : சுஜித் குமார் கொல்லி
கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்கலா எழுத்தாளர்: மணிபாபு கரணம்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Latest articles

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...

கவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய...

More like this

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...
error: Content is protected !!