Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaநாங்கள் எதிரிகளை புரட்டிடுப்பதை பார்க்கும்போது ரசிகர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்! -‘டைகர் 3' பட டிரெய்லருக்கு கிடைத்த...

நாங்கள் எதிரிகளை புரட்டிடுப்பதை பார்க்கும்போது ரசிகர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்! -‘டைகர் 3′ பட டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பில் உற்சாகமான சல்மான் கான் பேச்சு

Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் லேட்டஸ்ட்டாக உருவாகியுள்ள ‘டைகர் 3’ படத்திற்காக மீண்டும் தங்களது அடையாளங்களான டைகர் மற்றும் சோயா என்கிற சூப்பர் ஏஜென்ட் கதாபாத்திரங்களுக்கு திரும்பியுள்ளனர்.

சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட ‘டைகர் 3’யின் டிரைலர் உனடியாக இணையத்தை அதிரவைத்ததுடன், ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் ஆகிய யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் வெற்றிப்படங்களுக்கு மொத்தமாக கிடைத்ததை விட அதிக அளவில்  பார்க்கப்பட்ட டிரைலர் ஆகவும் மாறியுள்ளது.

இந்த டிரைலருக்கு தொடர்ந்து கிடைத்து வரும் பாசிடிவான வரவேற்பாலும் மக்கள் தங்கள் மீது காட்டும் அளவற்ற அன்பாலும் சல்மான் கானும் கத்ரீனா கைப்பும் சிலிர்த்துப்போய் இருக்கின்றனர். சல்மான் கான்-கத்ரீன் கைப் இருவருமே, தியேட்டர்களில் அவர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும்  கூட்டமாக அலைமோதும் அளவுக்கு  இந்திய திரையுலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான நிழல் திரை ஜோடியாக இருகின்றனர். மனிதநேயத்தை  காப்பாற்றுவதற்காக தங்களுடைய அனைத்தையும் பெரிய அளவில் தியாகம் செய்யும் விதமாக, அவர்களது டைகர் பட வரிசையில் ஒரு அடையாளமாக இது வெளியாகிறது.

சல்மான் கான் கூறும்போது, “டைகர் 3 டிரைலருக்கு கிடைத்துவரும் வரவேற்பை பார்க்கும்போது ரொம்பவே அற்புதமானதாக இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். என்னுடைய திரைப்பயணத்தில் எனக்கு கிடைத்த படங்களால், அவற்றால் எனக்கு கிடைத்த அளவற்ற அன்பால் நான் அதிர்ஷ்டமானவனாகவே இருந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கான பாராட்டுக்களை பெறும்போதும் ஒரு டிரைலர் வெளியீட்டுக்கு பிறகு இந்த அளவிலான வெறித்தனத்தை பார்க்கும்போதும் உண்மையிலே சிறப்பான மற்றும் அரிதான ஒரு உணர்வாக இருக்கிறது.

எங்களது டிரைலர் எல்லாவிதமான சரியான விஷயங்களையும் கொண்டுள்ளது என்பதிலும் மக்கள் அனைவரும் திரையரங்குகளில் ‘டைகர் 3’யைக் காண மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதிலும் எனக்கு மிகுந்த சந்தோசம். கத்ரீனா கைப்பையும் என்னையும் மீண்டும் சோயா மற்றும் டைகராக பார்ப்பதற்கு மக்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் நிஜமாகவே நெகிழ்ந்து போனேன். இந்த இரண்டு சூப்பர் ஏஜெண்டுகளும் பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளார்கள் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். மேலும் இந்த ‘டைகர் 3’ டிரைலர் மூலமாக அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக கொடுத்திருக்கிறோம் என்பதிலும் பெருமைப்படுகிறேன். எதிரிகளை புரட்டி எடுக்கும் ஆக்சனில் எங்கள் இருவரையும் பார்க்கும்போது மக்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள் என நினைக்கிறேன்” என்கிறார்.

கத்ரீனா கூறும்போது, “டைகர் 3’ டிரைலருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கும்போது நம்பமுடியாததாக இருக்கிறது. எங்களுக்காக கிடைத்திருக்கும் இந்த அன்பை பெறுவது கொஞ்சம் தனித்துவமானது ஏனென்றால் ‘டைகர் 3’ திரைப்படத்தை ஒரு கண்கவர் காட்சியாக மாற்றுவதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளனர். டைகர் பட வரிசையில் இது மூன்றாவது படம் என்பதால் ‘டைகர் 3’ குறித்து மக்கள் எந்த அளவு அபரிமிதமான எதிர்பார்ப்பு வைத்திருப்பார்கள் என்பதையும் நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். இந்த டிரைலர் ஒருமனதாக அன்பை பெற்று வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் படம் ரிலீஸாகும் வரை ‘டைகர் 3’க்கான தொனியை உருவாக்கும் ஒரு பிரச்சாரமாகவும் இது அமைந்துவிட்டது” என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, “டைகரும் சோயாவும் ஒரே புதிரின் இரண்டு துண்டுகள். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றும்போது அவர்கள் இருவருமே கவர்ச்சியான மற்றும் துணிச்சலானவர்கள். அதனால் இந்த இருவரும் மீண்டும் ஆக்சனில் இறங்கி செயல்படுவதை பார்க்கும்போது மக்கள் எவ்வளவு உற்சாகமடைவார்கள் என பார்ப்பதற்காக நான் சிலிர்ப்புடன் காத்திருக்கிறேன். மக்கள் இந்த டிரைலரை அதிக அளவுக்கு நேசித்திருப்பதால் நிச்சயமாக  அவர்கள் இந்த திரைப்படம் என்ன கொடுக்க இருக்கிறதோ அதன் ஓட்டத்துடன் அடித்துச்செல்லப்படுவார்கள் என உறுதியாக சொல்லமுடியும்” என்கிறார்.

மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்த ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!