Tuesday, September 10, 2024
spot_img
HomeCinemaகதாபாத்திரங்களின் ஆன்மாவின் குரலாக, வட்டார வழக்கில் பதிவான திரு.மாணிக்கம் படத்தின் டப்பிங்!

கதாபாத்திரங்களின் ஆன்மாவின் குரலாக, வட்டார வழக்கில் பதிவான திரு.மாணிக்கம் படத்தின் டப்பிங்!

Published on

நந்தா பெரியசாமி எழுதி இயக்கி, சமுத்திரகனி நடிப்பில் உருவான படம் ‘திரு.மாணிக்கம்.’

படப்பிடிப்பு முடிவடைந்தபின், டப்பிங் பணிகளும் நிறைவடைந்தது. குமுளி, தேக்கடி, மூணாறு பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும் வட்டார மொழியை தங்களது சொந்தக் குரலிலேயே பேசியிருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெறும் வசன உச்சரிப்புகளோடு இல்லாமல் ஆன்மாவின் குரலாக பேசியிருப்பது பார்வையாளர்களை படத்தோடு ஒன்றவைக்கும்.

ஆதங்கம், ஆற்றாமை, தவிப்பு, தடுமாற்றம் என பலவித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.

சமுத்திரக்கனி மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை ஜி பி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.

Latest articles

முக்கிய கதாபாத்திரத்தில் நாய்; ரஜினி ரசிகராக கதாநாயகன்; சென்டிமென்ட் கலந்த திரில்லராக ‘தில்ராஜா.’

விஜய் சத்யா ரஜினி ரசிகராக நடிக்கும் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரில்லர் திரைப்படம் 'தில்ராஜா.' சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார்,...

தங்கலானை கொண்டாடும் வட இந்திய மாநிலங்கள்… மகிழ்ச்சியில் படக்குழு.

சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க,  பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'தங்கலான்' தமிழ்,தெலுங்கு, மலையாளம்...

நடுக்கடலில் சவாலான ஷூட்டிங்… கொண்டல் படம் பற்றி சொல்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல்

ஷபீர் கல்லரக்கல் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு துல்கர்...

தலைப்பிலும், அறிவிப்புகளிலும் அழகுத்தமிழ்… மெய்யழகன் படக்குழுவை பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான்

அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி, இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும்...

More like this