யோகிபாபு, இனியா உள்ளிட்டோரின் நடித்து வெளியான ‘தூக்குதுரை’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தின் வெற்றிக்கு துணைநின்ற பத்திரிக்கையாளர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிட்ட உத்ரா புரொடக்ஷன்ஸ் தரப்பில், நாளுக்கு நாள் இந்த படத்திற்கு திரையரங்குகள் அதிகமாகிறது. வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதுபோன்று குடும்பமாக பார்க்கும் நல்ல திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அதிகளவில் வரவேண்டும்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளைப் பாண்டியன் பேசும்போது, தமிழகம் முழுவதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் தூக்குதுரைக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறேன், இது போன்ற சின்ன திரைப்படங்களுக்கு இன்னும் நிறைய திரையரங்குகள் கொடுக்க வேண்டும்” என்றார்.
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், இது குடும்பமாக பெண்கள் குழந்தைகளோடு சென்று திரையரங்கில் கண்டு களிக்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம், பார்வையாளர்களை கவரும் வகையிலும் ரசிக்கும் வகையிலும் ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்திருக்கிறேன். அதற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அடைகிறேன்” என்றார்.