‘டிரிப்’ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த படைப்பாக இயக்கியுள்ள படம் ‘தூக்கு துரை.’
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர் நடித்துள்ள முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் படம் வரும் ஜனவரி 25-ம் தேதி தைப்பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த படத்தை கேரள திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ‘No.6. வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ படத்தின் தயாரிப்பாளரான ‘பிஎஸ்எஸ் புரொடக்சன்ஸ்’ டாக்டர் பிரீத்தி சங்கர் பெற்று வெளியிடுகிறார்.
படத்தை ‘ஓப்பன் கேட் பிக்சர்ஸ்’ அர்விந்த் வெள்ளை பாண்டியன், அன்புக்கரசு ஆகியோர் தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பினை வினோத் மேற்கொண்டுள்ளார்.