Thursday, March 27, 2025
spot_img
HomeCinemaநடிகர் விஜயகாந்தின் சிலை மதுரையில் நிறுவப்பட வேண்டும்! -தமிழ்நாடு அரசுக்கு ‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்'...

நடிகர் விஜயகாந்தின் சிலை மதுரையில் நிறுவப்பட வேண்டும்! -தமிழ்நாடு அரசுக்கு ‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்’ கோரிக்கை

Published on

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் டிசம்பர் 28; 2023 அன்று காலமானார்.

சென்னை தீவுத்திடலில் அவரது உடலுக்கு ‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்’ சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதையடுத்து தமிழ்நாடு அரசுக்கு சங்கம் சார்பில் மூன்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

1. மறைந்த திரு. ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு ‘கேப்டன் விஜயகாந்த் சாலை’ அல்லது ‘புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் சாலை’ என பெயரிட வேண்டும்.

2. தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி ‘கேப்டன் விஜயகாந்த் விருது’ அல்லது ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவன செய்ய வேண்டும்.

3. மறைந்த திரு. ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் ‘கேப்டன்’ விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும்.

திரைத் துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறைசாற்றும் விதமாக, இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி அவர்கள், மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. வெள்ளக்கோயில் சாமிநாதன் அவர்கள், சென்னை மேயர் திருமதி ப்ரியா ஆகியோருக்கு வேண்டுகோளாக முன் வைக்கிறோம்.

நன்றி!

-தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துரை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

Latest articles

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

நடிகர் ராம்சரண் _ இயக்குநர் புச்சிபாபு சனா இணையும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், தேசிய விருது பெற்ற 'உப்பென்னா' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெடி' (PEDDI)...

More like this