Sunday, July 14, 2024
spot_img
HomeCinemaவிஜய் விஷ்வா, ஜீவா, பிரஜின் நடிப்பில் உருவாகும் ‘தரைப்படை.' பிரமாண்டமான செட்டில் படமாக்கப்பட்ட ஏர்போர்ட் காட்சிகள்!

விஜய் விஷ்வா, ஜீவா, பிரஜின் நடிப்பில் உருவாகும் ‘தரைப்படை.’ பிரமாண்டமான செட்டில் படமாக்கப்பட்ட ஏர்போர்ட் காட்சிகள்!

Published on

திரைப்படங்களில் கதை நகரத் தொடங்கியதுமே கதாநாயகன் யார், வில்லன் யார் என தெரிந்துவிடும். அந்த வழக்கத்துக்கு மாறாக கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரங்களின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற படமாக உருவாகிவருகிறது ‘தரைப்படை.’

இந்த படத்தை ராம்பிரபா இயக்க, ‘ஸ்டோனக்ஸ்’ பி.பி.வேல்முருகன் தயாரித்துள்ளார். ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் கையாளப்பட்டிருப்பது கேங்ஸ்டர் சம்பந்தமான கதை. ஒரு கும்பல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து அந்தப் பணத்தைக் கேங்ஸ்டர் கும்பல் கைப்பற்றுகிறது. இப்படி அந்தப் பணம் மாறி மாறி மனிதர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில் எங்கே செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்குப் பயணம் நிகழ்கிறது. இதுதான் படத்தின் கதைச்சுருக்கம்.

‘எளிய மக்களிடம் இருக்கும் ஒரு வன்முறைக் கும்பல் எப்படி கூட்டமாக இருந்து பிறருக்குத் தொல்லை கொடுக்கிறது என்பதையும், திரை மறைவு வேலைகளையும் சட்டவிரோத காரியங்களையும் குழுவாக நின்று எப்படி சாதிக்கிறது என்பதையும் மையப்படுத்தி நகரும் கதையென்பதால் தரைப்படை என பெயரிட்டோம்’ என்கிறது படக்குழு.

படத்தின் கதை, மொழியைத் தாண்டி ரசிக்கப்படும் என்பதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பான் இந்திய படமாக வெளியாகவுள்ளது.

ஜீவா நடித்த கொம்பு படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்த ஜீவா, ரஜினி ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் . ரஜினி போல் மேனரிசம் காட்டுவதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

அதேபோல நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக பிரஜின் இருக்கிறார் .அவர் நடித்த D3 திரைப்படம் தமிழ்நாட்டை விடவும் கேரளாவில் அதிக வசூல் பெற்றுத் தந்துள்ளது.

விஜய் விஷ்வா சமூக சேவைகள் மூலமும் சில குறிப்பிடத்தக்க படங்களின் பாத்திரங்கள் மூலமும் மக்களிடம் நன்கு அடையாளப்
படுத்தப்பட்டுள்ளவர் .

இப்படி தனித்தனியான அடையாளம் பெற்ற மூன்று பேரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஜோடியாக மூன்று அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

படத்திற்காகக் கோடிக் கணக்கில் செலவழித்து கலை இயக்குநர் ரவீந்திரன் கைவண்ணத்தில் ஒரு பிரமாண்டமான ஏர்போர்ட் செட் போடப்பட்டுள்ளது. அதில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.

மிரட்டல் செல்வாவின் இயக்கத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் ராம்பிரபாவுடன் திரைப்பட உருவாக்கப் பணிகளில் தேர்ந்த, சுரேஷ்குமார் சுந்தரம், மனோஜ் குமார் பாபு, ராம்நாத், ரவீந்திரன், மிரட்டல் செல்வா, எஸ்.வி. ஜாய்மதி, ராக் சங்கர்,சரண் பாஸ்கர், ராஜன் ரீ,குருதர்ஷன், மேகமூட்டம் வைத்தி, நித்திஷ் ஸ்ரீராம் , பவிஷி பாலன்,ஸ்ரீ சாய் ஸ்டுடியோ, வெங்கட் உள்ளிட்டோர் படத்தில் பங்களிப்பு தருகின்றனர்.

Latest articles

எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஃபுட்டேஜ்’படத்தின் டிரெய்லர் வெளியானது!

எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் 'ஃபுட்டேஜ்'படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சினிமா ஆர்வலர்கள் மற்றும்...

இந்தியன் 2 சினிமா விமர்சனம்

'அதே டெய்லர்; அதே வாடகை' டைப்பில் 'அதே லஞ்சம்; அதே ஊழல்; அதே தண்டனை' என வர்மக்க(கொ)லை மன்னன்...

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2.’ வேல்ஸ் ஃபிலிமோடு இணைந்து தயாரிக்கும் விக்னேஷ் சிவன்!

'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி பட...

யூடியூபர் ஹரி பாஸ்கர், லாஸ்லியா நடிக்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள...

More like this

எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஃபுட்டேஜ்’படத்தின் டிரெய்லர் வெளியானது!

எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் 'ஃபுட்டேஜ்'படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சினிமா ஆர்வலர்கள் மற்றும்...

இந்தியன் 2 சினிமா விமர்சனம்

'அதே டெய்லர்; அதே வாடகை' டைப்பில் 'அதே லஞ்சம்; அதே ஊழல்; அதே தண்டனை' என வர்மக்க(கொ)லை மன்னன்...

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2.’ வேல்ஸ் ஃபிலிமோடு இணைந்து தயாரிக்கும் விக்னேஷ் சிவன்!

'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி பட...