Monday, March 24, 2025
spot_img
HomeCinemaகவித்துவமும் அழகியலும் நிறைந்த, அறத்தை வலியுறுத்தும் திருக்குறள் திரைப்படமாகிறது! ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

கவித்துவமும் அழகியலும் நிறைந்த, அறத்தை வலியுறுத்தும் திருக்குறள் திரைப்படமாகிறது! ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

Published on

ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திருக்குறளை திரைப்படமாக தயாரிக்கிறது. வரும் 2024-ம் ஆண்டு தை மாதம் திருவள்ளுவர் தினத்தன்று இந்த படத்தின் துவக்க விழா நடக்கவிருக்கிறது. அது குறித்து படத் தயாரிப்பு தரப்பிலிருந்து கிடைத்திருக்கும் செய்தி…

ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பாக, கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற அத்திரைப்படம், காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது.

தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறோம்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பாரதியின் வாக்கு மிகையில்லை என்றாலும், ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்புதான், தமிழின், தமிழ் பண்பாட்டின், தமிழரின் மேன்மையை மேற்கத்திய அறிவுலகம் அண்ணாந்து பார்த்தது.

தேசத்தந்தை மகாத்மாவும், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் இன்று உலக அரங்கில், அறிஞர்கள் மத்தியில் இந்தியாவின் முகங்களாக அறியப்படுகின்றனர். பிரபல ரஷ்ய எழுத்தாளர் ‘டால்ஸ்டாய்’ ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட பின்புதான் காந்திஜிக்கு திருக்குறள் அறிமுகமாகிறது.

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை. திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்’
என்ற பாரதியின் வரிகளை கட்டளையாக ஏற்றே திருக்குறளை திரைப்படமாக்கத் தீர்மானித்தோம்.

பைபிளிற்குப் பின் உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அச்சு ஊடகம் என்பது எழுத்தறிந்தோர்க்கு மட்டுமே. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும்; இசையைப் போல; ஓவியத்தைப் போல…

திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம்.

இமாலயக் கருத்துகளை ஈரடியில் எளிதாகச் சொல்லிவிடுகிறது திருக்குறள். ஆனால் திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும்போது உணர முடிந்தது.

அறத்தினை வலியுறுத்த தோன்றிய நீதி நெறிநூல் என்றாலும் குறள் வெறுமனே பிரசார இலக்கியமல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதை பிரதிபலிக்க முயற்சித்துள்ளோம்.

ஒரு படைப்பின் வழியே படைப்பாளியை அறிந்து கொள்ள முடியும். ஒரு குறளை காட்சியமைக்க முயலும்போது, அதனூடாக திருவள்ளுவரும், ரத்தமும், சதையுமாக உயிர்த்தெழுந்து வருகிறார். அவ்வகையில் திரைக்கதை முழுவதும் திருவள்ளுவரும் வியாபித்துள்ளார், நிறைந்துள்ளார். மலரில் மணம் போல..

‘பரந்து கெடுக உலகியற்றியான்’ என தீட்சண்யமான கண்களோடு, அறச் சீற்றம் கொள்ளும் வள்ளுவர், ‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும்’ என மென்மையான காதலனாக கனிந்தும் நிற்கிறார்.

திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது.

அதோடு அன்றைய மெய்யியல், அறவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.

‘காமராஜ்’, முதல்வர் மகாத்மா, திரைப்படங்களைத் தயாரித்த எங்களுக்கு இப்பணி கிட்டியிருப்பது முன் வினைப்பயனே!

இத்திரைப்படத்திற்கென தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.

 

 

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...