Wednesday, January 14, 2026
spot_img
HomeUncategorizedஅனைத்து திகில் வகையிலிருந்தும் இந்த திகில் தொடர் தனித்துவமாக இருக்கும்! -‘தி வில்லேஜ்' வெப் சீரிஸில்...

அனைத்து திகில் வகையிலிருந்தும் இந்த திகில் தொடர் தனித்துவமாக இருக்கும்! -‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸில் நடித்த அனுபவம் பகிர்கிறார் நடிகர் ஆர்யா

Published on

பிரைம் வீடியோவுக்காக ஆர்யா நடித்த, மிலிந்த் ராவ் இயக்கிய, தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் வெப் சீரிஸ் ‘தி வில்லேஜ்.’

இந்த சீரிஸில் திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

இந்த சீரிஸ் வரும் நவம்பர் 24-ம் தேதி இந்தியா மற்றும் 240+ நாடுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகவுள்ளது.

இந்த ஒரிஜினல் திகில் தொடர் பற்றி நடிகர் ஆர்யா பேசுகையில், ‘ ‘தி வில்லேஜ் எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. இதன் கருத்தாக்கம், திகில் & த்ரில்லர் அம்சம் மற்றும் ஆழமான கதை ஆகியவை இந்திய ஒ டி டி சந்தையில் ஒரு போதும் அதன் ரசிகர்களால் அனுபவிக்கப்படவில்லை. மேலும் இந்த இணைய தொடர் சுவராசியமானதாக இருப்பதையும் நான் கண்டேன். இது என்னை தொடர்ந்து பணியாற்ற வழி வகுத்தது.‌ இந்திய ஒ டி டி இயங்கு தளங்களில் காணப்படும் அனைத்து திகில் வகையிலிருந்தும் ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடர் தனித்துவமானதாகும்.

பல தருணங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் திகில்.. ஓர் எல்லைக்குள் பின் தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதை உருவாக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உண்டு. ஆனால் இந்த திகில் தொடரில் இயக்குநர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழி என நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்கள் இந்த வகையான ஜானரிலான படைப்புகளை கண்டு ரசிக்க விரும்புகிறார்கள்.” என்றார்.

தி வில்லேஜ் தொடக்கத்தில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, முதலில் யாலி ட்ரீம் ஒர்க்ஸால் அதே பெயரில், பிரசுரிக்கப்பட்ட கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடர்.

மிலிந்த் ராவ், தீராஜ் வைத்தி, மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோரின் எழுத்தில் உருவான இந்தத் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பி.எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!