Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaசிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன்... திரைப்பிரபலங்கள் 10 பேர் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன்… திரைப்பிரபலங்கள் 10 பேர் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

செந்தமிழன் சீமான், ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘சீமானின் தர்மயுத்தம்.’

ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்.

‘தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’, ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தில், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன், சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில், இயக்குநர்கள் சேரன், சுந்தர்.சி, சீனு ராமசாமி, எச்.வினோத், சசிகுமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கஸ்தூரி ஆகியோர் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டனர்.

தென்காசி, குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப் புறங்களிலும் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஆதம் பாவா, “இதற்கு முன்பு என் தயாரிப்பில் ஆன்டி இண்டியன் மற்றும் உயிர் தமிழுக்கு ஆகிய இரு படங்களும் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியிருந்தது. ஆனால் இந்த தர்மயுத்தம் திரைப்படத்தில் அரசியல் கட்சித்தலைவரான சீமான் நடித்திருந்தாலும், இது துளி கூட அரசியல் இல்லாத படம் என்பது தான் ஹைலைட்.

சீமான் நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஏற்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

தற்போது மலையாளத்தில் மட்டுமே கதையம்சமுள்ள தரமான விறுவிறுப்பான வித்தியாசமான படங்கள் வருகிறது என்று விமர்சகர்களும் ரசிகர்களும் கூறுகிறார்கள் அல்லவா?

தமிழிலும் அதற்கு சளைக்காத திரைக்கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் விதமாக இந்த படம் ஒரு விறுவிறுப்பான எமோஷனல் இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லராக அமைந்துள்ளது

இப்படத்திற்குப் பிறகு இயக்குநர் இரா,சுப்ரமணியன் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வருவார்.

மேலும் இது ஆரோக்கியமான மாற்று தமிழ் சினிமாக்களின் துவக்கமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!