Monday, February 10, 2025
spot_img
HomeCinemaகிராஃபிக் நாவலை இதுவரை யாரும் திரைப்படைப்பாக எடுக்காததால் தமிழுக்கு இது புதிதாக இருக்கும்! -‘தி வில்லேஜ்'...

கிராஃபிக் நாவலை இதுவரை யாரும் திரைப்படைப்பாக எடுக்காததால் தமிழுக்கு இது புதிதாக இருக்கும்! -‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிலிந்த் ராவ் பேச்சு

Published on

ஆர்யா நடிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில், தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக உருவாகியுள்ளது ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ்.

இந்த சீரிஸ் வரும் நவம்பர் 24-ம் தேதி இந்தியா மற்றும் 240+ நாடுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகவுள்ளது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டமே கதைக்களம். இந்த சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியபோது, ‘‘கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய்ததில்லை. அந்த வகையில் இது தமிழுக்கும் ஆர்யா சாருக்கும் மிகவும் புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நமக்கு நெருக்கமாக, நம் மொழியில் உருவாக்கியுள்ளோம்.

இந்த சீரிஸிற்கு இசை மிகமிக முக்கியம். அதை உணர்ந்து கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டாகாசமான இசையை தந்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் சீரிஸ் சிறப்பாக உருவாக நன்றாக உழைத்திருக்கிறார்கள்” என்றார்.

நடிகர் ஆர்யா பேசியபோது, ‘‘மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா என்றுதான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல். படத்தை விட பெரிய பட்ஜெட். அவர் சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செய்தார்கள். மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார். மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார். இதை எடுப்பது மிகக்கடினம். ப்ராஸ்தடிக் மேக்கப், ஷூட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. மூன்று வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்ட்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. நான் இப்படியான ஹாரர் கதையில் நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட். அதை நம்பித்தான் ஒத்துக் கொண்டேன்.

ஆடுகளம் நரேனுடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஒவ்வொரு எபிஸோடும் அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம். அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.

இந்த சீரிஸுக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

Latest articles

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடந்தது!

அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது....

More like this