Friday, March 28, 2025
spot_img
HomeCinemaநூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியது சவாலாக இருந்தது! -தண்டேல் பட அனுபவம் பகிர்கிறார் சாய்...

நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியது சவாலாக இருந்தது! -தண்டேல் பட அனுபவம் பகிர்கிறார் சாய் பல்லவி 

Published on

நாக சைதன்யாவுடன் தான் இணைந்து நடித்துள்ள தண்டேல் படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்கிறார் சாய் பல்லவி.

இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் என்ன? எனக் கேட்டால்…இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருந்ததால் என்னைக் கவர்ந்தது. இந்த கதையின் மூல வடிவத்தை கோவிட் காலகட்டத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் என்ன சம்பவம் நடந்தது? என்ற விவரம் இடம் பிடித்திருந்தது. பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் தங்களுடைய விருப்பத்திற்குரியவர்களை அவர்களுடைய மனைவிமார்கள் எப்படி எந்தவித தொடர்பும் இல்லாமல் மீட்டு வந்தார்கள் என்று விசயம் இருந்தது. அதை படித்தவுடன் இதனை எப்போது செய்தாலும்.. இந்த உணர்வு ரசிகர்களுக்கு சரியான விதத்தில் சென்றடையும் என கணித்தேன்.

ஒவ்வொரு படத்திலும் உங்களின் நடிப்பு சிறப்பாக இருக்கிறதே. இதற்கான காரணம் என்ன? என கேட்டால்..
அதற்கு காரணம்.. அந்தக் கதை.. அந்த கதாபாத்திரம்.. அதன் இயக்குநர்.. இந்த மூன்றும் தான் முக்கிய காரணம்.

சாய் பல்லவியின் நடிப்பை போல் நடனமும் பிரபலம். இந்த திரைப்படத்தில் எப்படி..? என்ன கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால்….
நடனத்தை பொறுத்தவரை நான் நன்றாக ரசித்து ஆடுவேன். விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதை பார்க்கும் போது நாமும் ஆட வேண்டும் என்று தோன்றும். விஜய் சார் சிம்ரன் மேடம் நடனமாடும் போது அதை பார்த்து உற்சாகம் அடைந்திருக்கிறேன்.

நடன அசைவுகளை துல்லியமாக ஆட வேண்டும் என்பதை விட அதை அனுபவித்து ஆட வேண்டும் என எண்ணுவேன்.

இந்தப் படத்தில் பல நூறு நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடும் போது அது சவாலானதாகத் தான் இருந்தது. குறிப்பாக இந்த பாடலுக்கு நடனமாடும் போது என் சக கலைஞரான நாக சைதன்யா உடன் இணைந்து நிறைய ஒத்திகை பார்த்தோம். அந்தப் பாடலில் என்னை விட நாக சைதன்யா நன்றாகவே நடனமாடி இருக்கிறார்.

கிரையுலகில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்கிறீர்களே.. இதன் ரகசியம் என்ன? எனக் கேட்டால்…என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் பங்களிப்பு செய்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்.

‘தண்டேல்’ திரைப்படம் ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் பாடல்கள் இருக்கிறது. சண்டை காட்சிகள் இருக்கிறது. நடனமும் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உணர்வுபூர்வமான காதலும் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன்.

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this