‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத் தயாரித்துள்ளது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படம் விரைவில் வெளியாகிறது.
முன்னதாக இன்று, இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டு, பாடலை பாராட்டினார்.
இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப் பாடலும் இயற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் இயக்குநர் ஏ ஜே பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் டி பி இராஜேந்திரன், வி ஐ டி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன், வாசுகியாக நடித்துள்ள தனலட்சுமி, ஒளிப்பதிவாளர் ஏ எம் எட்வின் சகாய் ஆகியோர் பங்கேற்றனர்.