‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் 74 வது பிறந்த நாள் மற்றும் அவரின் திரையுலகில் 50வது ஆண்டை (Golden Year In Cinema) கொண்டாடும் வகையில் வரும் 12.12.2024 அன்று தளபதி படம் வெளியாகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா ஆகியோரது நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான தளபதி மெகா ஹிட் திரைப்படமான தளபதி, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப மெருகேற்றலில் (4 K) உருவாகியுள்ளது. அதனை எஸ் எஸ் ஐ புரொடக்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் 150 மேலான திரையரங்குகளில் மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது.
இந்த படம் வெளிவந்து 33 வருடங்கள் ஆகியும் மிகுந்த எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். குறிப்பாக எஸ் பி பி பாடிய ராக்கம்மா கையத் தட்டு, சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஆகிய பாடல்கள் வரலாற்றில் சிறந்த இடத்தை பிடித்தவை. அப்படி பல சிறப்புகளைக் கொண்ட, திரையுலக வரலாற்றில் மைல்கல்லாக விளங்குகிற தளபதியை சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களும், இன்றைய தலைமுறை ரசிகர்களும் கண்டு ரசிக்கவுள்ளனர்.