Tuesday, March 10, 2026
spot_img
HomeCinema'நேஷனல் க்ரஷ்' ராஷ்மிகா நடிக்கும் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீஸரை வெளியிட்டார் விஜய் தேவரகொண்டா!

‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா நடிக்கும் ‘தி கேர்ள்பிரண்ட்’ படத்தின் டீஸரை வெளியிட்டார் விஜய் தேவரகொண்டா!

Published on

‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனா, திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி இணைந்து நடிக்கும் ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டீசரை நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்.

டீஸர் ராஷ்மிகா கல்லூரி விடுதிக்குள் நுழைவதிலிருந்து தொடங்குகிறது. ஹீரோ தீக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகாவின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது, அவர்களுக்கு இடையேயான அழகான உறவைக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் முன்னணி ஜோடியின் உணர்வுபூர்வமான பயணம் இதயப்பூர்வமான தருணங்களுடன் அவர்களின் உறவைச் சித்தரிக்கிறது. கவித்துவமான உரையாடல்களுடன் விஜய் தேவரகொண்டாவின் குரல்வளம் நம்மை கவர்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், டீசரின் முடிவில் ராஷ்மிகாவின் உரையாடலும் அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படம் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, ”டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார். இந்த படம், ஒரு நடிகையாக அவருக்கு அதிக பொறுப்பை அளித்துள்ளது, அந்த பொறுப்பை அவர் முறையாக ஏற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இதயங்களைக் கவரும் இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

படக் குழு:
தயாரிப்பு: கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ், தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள்: தீரஜ் மொகிலினேனி, வித்யா கோப்பினிடி
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
எழுத்து, இயக்கம்: ராகுல் ரவீந்திரன்
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
ஆடைகள்: ஷ்ரவ்யா வர்மா
தயாரிப்பு வடிவமைப்பு: எஸ். ராமகிருஷ்ணா, மௌனிகா நிகோத்ரி
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!