எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனம் எழுதி வருபவர். அவர் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் இயக்குநராகும் படம் ‘தீரா வன்மம்.’
நாயகர்களாக புதுமுகங்கள் சிபு , தினேஷ், அஜித் நடிக்க நாயகிகளாக மீனாட்சி, லட்சுமி, சோனா ஆகியோர் நடிக்கிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் நடைபெறவுள்ளது. படத்தை வரும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இது ஒரு சைக்கோ திரில்லர் வகை படம். நாஞ்சி எனும் செவிலியர் பெண்ணுக்கு மாடல் துறையில் மிகவும் பிரபலமான பெண்ணி எனும் ஆண் அறிமுகம் ஆகிறார். அவர்களின் நட்பு வளர்ந்து காதலாக மாறுகிறது, அதே நேரத்தில் அவர்களின் குடியிருப்பு அருகே பல்வேறு மரணங்கள் நடைபெறுகிறது இதை யார் செய்தார் எதற்காக செய்தார் என்பதை திரில்லர் ஜானரில் சொல்ல வருகிறோம்” என்றார்.
படக்குழு:-
தயாரிப்பு : ஷில்பகலா ப்ரொடக்ஷன் பி மது
இசை: பீட்டர்
ஒளிப்பதிவு: சிபு ரவீந்திரன்
படத்தொகுப்பு: ராஜேஷ்