‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த த.செ.ஞானவேல், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதைநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
‘2.O’, ‘தர்பார்’, ‘லால் சலாம்’ படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தையும் ‘லைகா புரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
‘தலைவர் 170′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள, பான் இந்திய படைப்பாக, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
‘அந்தா கனூன்’, ‘கிராப்தார்’, ‘ஹம்’ ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக அமிதாப்பச்சனும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பேட்ட’, ‘தர்பார்’, ‘ஜெயிலர்’ என ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் துவங்கியது.
படக்குழு:-
ஒளிப்பதிவு – எஸ்.ஆர். கதிர்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
கலை இயக்குநர் – கே. கதிர்
சண்டைப் பயிற்சி – அன்பறிவ்
ஒப்பனை – பானு (ரஜினிகாந்த் )
ஆடை வடிவமைப்பாளர் – அனு வர்தன்
மக்கள் தொடர்பு ; ரியாஸ் கே அஹ்மத்