Friday, March 28, 2025
spot_img
HomeCinemaநிகில் நடிக்கும் 'சுயம்பு' படத்திற்காக குதிரையேற்ற பயிற்சியைத் தொடங்கிய சம்யுக்தா!

நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்திற்காக குதிரையேற்ற பயிற்சியைத் தொடங்கிய சம்யுக்தா!

Published on

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் இருபதாவது படமான ‘சுயம்பு’வில் புகழ்பெற்ற போர்வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் தீவிர பயிற்சி எடுத்தார் நடிகர் நிகில். நம்பமுடியாத போர் காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் அவரின் சண்டைக் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும்.

அவருடன் நடிகை சம்யுக்தாவும் சில சண்டைக்காட்சிகளில் நடிக்கவுள்ளார். அதற்காக குதிரையேற்றம் கற்கும் பயணத்தைத் தற்போது தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “எனது அடுத்த படமான ‘சுயம்பு’வுக்காக நான் குதிரை சவாரி கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் புதுப் பயணம் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் குதிரையுடன் இணக்கமாக பழகி இந்தப் பயணத்தை கற்று வருகிறேன். இதற்காக ஒரு குழுவாக நாங்கள் ஒன்றாகச் செயல்படுவது அழகாகவும் இருக்கிறது” என்றார்.

தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த பான் இந்தியா படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உயர்தரமான தயாரிப்புடன் ‘சுயம்பு’ படம் உருவாகிறது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நிகில் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
இசை: ரவி பஸ்ரூர்,
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,
வசனங்கள்: வாசுதேவ் முனேப்பகரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம் பிரபாகரன்,
இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர்,
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this