பூமிகா, யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார் மூவரும் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்க பக்ஸ், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘ஸ்கூல்.’
முழுக்க முழுக்க ஸ்கூலில் நடக்கும் கதையாக உளவியல் ரீதியான திரில்லர் வகை படமாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர் கே வித்யாதரன்.
கன்னடத் திரையுலகில் உபேந்திரா வைத்து கனவில் நடக்கும் சம்பவங்களை திரில்லராக ‘நியூஸ்’ திரைப்படத்திலும், மறுஜன்மத்தை பற்றி ஆராயும் விதமாக ‘வைத்தீஸ்வரன்’ படத்தின் கதைக்களத்தையும் அமைத்தது போல் இந்தப் படத்தில் சமூக நம்பிக்கைகளையும் ஆவிகள் உலகத்தில் நடக்கும் மன மாற்றங்களையும் மையமாக வைத்து கதையை நகர்த்தவிருக்கிறார்களாம்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.
அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்லவிருக்கிறோம்.
மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும் மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே எஸ் ரவிக்குமாரும் பிரின்சிபலாக பக்ஸும் சாம்ஸும் நடிக்கிறார்கள்” என்றார்.
படக்குழு:
தயாரிப்பு : ஆர் கே வித்யாதரன், கே. மஞ்சு
ஒளிப்பதிவு: ஆதித்யா கோவிந்தராஜ்.
எடிட்டிங்: ராகவ் அர்ஸ்
கலை: விஜய் ஐயப்பன்
ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட்: வி. நிவேதா
தயாரிப்பு மேற்பர்வை : கலை
உடைகள்: பாண்டியன்
மேக்கப்: சீனு
விளம்பர வடிவமைப்பு: சதீஷ் ஜே
மக்கள் தொடர்பு: மணவை புவன்