சீயோன் ராஜா எழுதி, இயக்கி, தயாரித்துள்ள படம் ‘சமூக விரோதி.’
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடந்தது.
அதையடுத்து படத்தை வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், தணிக்கைக் குழுவினர் (சென்சார்) பார்ப்பதற்காக படம் அனுப்பி வைக்கப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு என்ன வகை சான்றிதழ் கொடுக்கலாம் என்று முடிவெடுக்க முடியாமல் தவித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து மறு ஆய்வு குழுவிற்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
‘சமூக விரோதி’ படம் தணிக்கைக் குழுவினரை தவிக்கவிட்டிருப்பது, சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.