Monday, April 21, 2025
spot_img
HomeCinemaஅயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு பரபரப்பாக வெளியீட்டுக்குத் தயாராகும் நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து...

அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு பரபரப்பாக வெளியீட்டுக்குத் தயாராகும் நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடிய ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடல்!

Published on

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் திருக்கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.

பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. ஆடியோ வடிவில் முதலில் வெளியிடப்பட உள்ள ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடல் விரைவில் வீடியோவாகவும் வெளியாகவுள்ளது.

பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா திறம்பட செய்துள்ளார். பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, “500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்,” என்று கூறினார்.

மேலும் தகவல்களை பகிர்ந்த அவர், “ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலை நாமும் காணும் பாக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது,” என்றார்.

‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடலுக்கு பங்களித்த இசை வாத்திய கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!