Tuesday, April 22, 2025
spot_img
HomeGeneralசென்னை மக்கள் கண்டு ரசிக்க ஜீகே மீடியா நடத்தும் சங்கீத உற்சவம்! கிழக்கு கடற்கரைச் சாலையில்...

சென்னை மக்கள் கண்டு ரசிக்க ஜீகே மீடியா நடத்தும் சங்கீத உற்சவம்! கிழக்கு கடற்கரைச் சாலையில் டிசம்பர் 27 முதல் 6 நாட்கள் நடக்கிறது.

Published on

பொதுவாகச் சென்னை நகருக்குள்தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வகையில், ஜீகே மீடியா நிறுவனம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது.

இந்த செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் பாடகி மஹதி பேசியதாவது…
பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான மயிலை, தி நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கிறது. பரந்து விரிந்துவிட்ட சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும், மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும், சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது.

இவ்விழா 6 நாட்கள், வெவ்வேறு கலைஞர்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நான் 31 ஆம் தேதி இசை நிகழ்வில் கலந்துகொள்கிறேன்.

இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா பேசியதாவது…
ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் சீசன் 2, பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கடந்த சீசனைப் போல, நானும் நண்பர் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் கலந்துகொள்கிறோம். முதல் சீசன் பிரமாதமாக நடைபெற்றது. இரண்டாவது சீசன் இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரை பகுதியில் நடந்தாலும், இந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானும் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் இணைந்து 29 ஆம் தேதி நிகழ்ச்சி செய்யவுள்ளோம். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் R.K Convention Centre உட்புற அரங்கில் , 2000 ஆம் பேர் வரை அமர்ந்து ரசிக்கும் வகையில் /800 கார் பார்க்கிங் உள்ள பிரம்மாண்டமான நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்சன் சென்டர் அரங்கத்தில், பல முன்னணி பிரபல இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு கேரளா ஷரத் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 28 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு . திரிச்சூர் சகோதரர்கள் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு ராஜேஷ் வைத்யா அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு . விக்னேஷ் ஈஸ்வர் திரு.திருவாரூர் பக்தவச்சலம் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருமதி பாடகி மஹதி அவர்களின் நிகழ்ச்சி
ஜனவரி 1 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு ராகுல் தேஷ் பாண்டே மற்றும் திரு சந்தீப் நாராயணன் அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விவரங்களுக்கு, மோகன் 94440 86136

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!