Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaஉலகளவில் பிரமாண்ட வெற்றி பெற்ற பிரபாஸின் ‘சலார்.' வாரக் கடைசியில் 402 கோடி ரூபாய் வசூல்...

உலகளவில் பிரமாண்ட வெற்றி பெற்ற பிரபாஸின் ‘சலார்.’ வாரக் கடைசியில் 402 கோடி ரூபாய் வசூல் செய்து வரலாற்று சாதனை!

Published on

பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ‘கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்து, கடந்த வாரம் வெளியான ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. வசூலில் பாக்ஸ் ஆபீஸில் புயலை உருவாக்கியுள்ளது.

படம் வெளியான வெள்ளிக்கிழமையன்று உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து, இதற்கு முன்னரான பல பெரிய சாதனைகளின் சாதனையை முறியடித்தது. அற்புதமான ஓப்பனிங்கைப் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

வெளியான இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் 295.7 கோடி ரூபாயை வசூலித்து, தொடர்ந்து பெரிய திரைகளில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலுடன் இப்படத்திற்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் ‘டிக்கெட் விண்டோ’விலும் தொடர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தனது இடத்தை மிகப்பெரிய வித்தியாசத்துடன் உறுதிப்படுத்தி உள்ளது. வார இறுதியில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 402 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது வசூல் ஒவ்வொரு நாளும் மேல்நோக்கி செல்வதை காட்டுகிறது.

வெளியான மூன்று நாட்களில் பார்வையாளர்கள் பதிவு செய்த டிக்கெட்டுகள் குறித்து ‘டிக்கெட் விண்டோ:வில் இதன் சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்திருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு படைப்புகளை பார்வையிடும் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய படைப்பின் சான்றாகவும் திகழ்கிறது.

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!