‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அது குறித்து தயாரிப்பாளர் மன்சூர் கூறும்போது, ‘‘எங்கள் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 27-ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சென்னை, கோவளம், பிச்சாவரம், பாண்டிச்சேரி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு 45 நாட்கள் நடந்தது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி படப்பிடிப்பு முடிந்தது. தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
மலையாளத்தில் ‘பதினெட்டாம் பாடி’, ‘வாலாட்டி’ உள்ளிட்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சாப்ரியா கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ‘போர்தொழில்’ லிஷா சின்னு, ‘சூப்பர் டீலக்ஸ்’ நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளம்பரப்பட இயக்குநர் விவேக் ராஜாராம் இந்த படம் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியுள்ளது.
இந்த படத்திற்கு அஸ்வின் ஆர்யன் இசையமைத்துள்ளார். ‘தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9′, ‘தில்லுக்கு துட்டு’ படங்களின் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிகளைக் கவனித்துள்ளார்.