Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaநடிகராகிறார் இயக்குநர் சீனு ராமசாமி! சென்னையில் தொடங்கியது படப்பிடிப்பு.

நடிகராகிறார் இயக்குநர் சீனு ராமசாமி! சென்னையில் தொடங்கியது படப்பிடிப்பு.

Published on

தேசிய விருது பெற்ற வெற்றிப்பட இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் படத்தை பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான சி வி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். ‘தங்கம் சினிமாஸ்’ எஸ் தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர். சீனு ராமசாமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் விதத்தில், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே சமூக நீதி என்பதையும் இது அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும் என்பதையும் உரக்கச் சொல்லும் விதத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் காட்சியை சி வி குமார் இயக்க, படப்பிடிப்பு சென்னையில் இன்று இனிதே தொடங்கியது. சீனு ராமசாமி நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர் நடிகைகள் பங்கு பெற்ற நிலையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து விழுப்புரம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

படத்தின் இயக்குநர் ‘‘இந்த படம் புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக அமையும். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யும்” என்றார்.

படக்குழு:-
இணை தயாரிப்பு: எஸ் ஶ்ரீராம்
ஒளிப்பதிவு – ஏ எஸ் சூர்யா
இசை – ஹரி
படத்தொகுப்பு – வி பி வெங்கட் எஸ் ஆர் உடைகள் வடிவமைப்பு – ஸ்வேதா
மக்கள் தொடர்பு – நிகில்முருகன்

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!