HomeGeneralஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘சொப்பன சுந்தரி' கலைஞர் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒளிபரப்பு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘சொப்பன சுந்தரி’ கலைஞர் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒளிபரப்பு!

Published on

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் 25-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். கருணாகரன், மைம் கோபி, தீபா, லட்சுமி பிரியா சந்திரமௌலி, சதீஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கினறனர்.

காரை மையமாக வைத்து குடும்பத்திற்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படம் வறுமையில் வாடும் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துக்கு குலுக்கலில் கார் பரிசாக விழ, அதனை உரிமை கொண்டாட அண்ணன் கருணாகரன், மாமா மைம் கோபி என வரிசைகட்ட பிரச்சனை காவல் நிலையம் வரை செல்ல என விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகியிருக்கிறது.

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this