சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் காட்சித் தொடர்பியல் (விஸ்காம்) துறையின் ஆண்டு விழா இன்று (21.11.2023) நடைபெற்றது.
விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களை தன் பாணியில் இயக்கி, தனி முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ‘திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. விருதினை எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அருண்குமார் உடனிருந்தார். விருது வழங்கும் முன் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டது.
விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டார்.