Monday, March 24, 2025
spot_img
HomeCinemaசல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதுவதை மக்கள் ரசித்ததால் மகிழ்ச்சியடைகிறேன்! -‘டைகர் 3' பட வில்லன்...

சல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதுவதை மக்கள் ரசித்ததால் மகிழ்ச்சியடைகிறேன்! -‘டைகர் 3′ பட வில்லன் இம்ரான் ஹாஷ்மி

Published on

யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் மிகப் பிரமாண்டமான தயாரிப்பான டைகர்-3 படத்தில் இம்ரான் ஹாஷ்மி தனது வில்லத்தனமான திருப்புமுனை ஏற்படுத்தும் நடிப்பின் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் நாட்டின் மிகப்பெரிய அதிரடி சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதும் போதும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் டைகர்-3 பிரமிக்க வைக்கும் அளவில் வெறும் 4 நாட்களில் உலகளவில் 169.75 கோடி நிகர வசூலையும் 272 கோடி மொத்த வசூலையும் பதிவு செய்துள்ளது, மேலும் மற்றொரு பெரிய வார இறுதி வசூலை வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்ய உள்ளது! தன் மீதும் டைகர்-3-ன் மீதும் மக்கள் பொழியும் அன்பால் சிலிர்த்துப் போயிருக்கிறார் இம்ரான்!

இம்ரான் கூறும்போது, ​​“டைகர்-3-ன் படத்திற்கு கிடைத்த வரவேற்பையும், எனது நடிப்பின் மீது மக்கள் எந்த அளவிற்கு அன்பைப் பொழிந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டு நான் சிலிர்த்துப் போயிருக்கிறேன். நாங்கள் ஒரு நல்ல நோக்கத்தோடு படத்தை தொடங்கினோம், மேலும் படம் உலகளவில் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்த்தேன்.  ஆன்டி-ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை நான் மிகவும் ரசித்தேன், மேலும் நம் நாட்டின் மிகப்பெரிய அதிரடி சூப்பர் ஸ்டாரான சல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதுவதை விட வேறேது சிறந்ததாக இருக்கும்!  எங்கள் மோதலை மக்கள் ரசித்து மகிழ்ந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் எப்போதுமே நான் தேர்வு செய்யும் திரைப்படங்களின் மூலம் மக்களை மகிழ்விக்க விரும்புவேன் மற்றும் ஒரு எதிர்மறையான  கதாபாத்திரத்திரம்  நான் இதுவரை முயற்சி செய்யாத விஷயங்களை முயற்சிக்க சுதந்திரம் அளித்தது.  எனது வில்லத்தனமான திருப்புமுனை கதாபாத்திரத்திரத்தை ரசித்ததற்காகவும், டைகர்-3 படத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக மாற்றியதற்காகவும் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் ஷர்மா இயக்கத்தில் உருவான டைகர்-3 இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this