எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் கீழ் செயல்பட்டுவரும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றத்தின் 9ஆம் ஆண்டுத் தொடக்க விழா 31.10.23 அன்று எஸ்.ஆர்.எம். காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது.
புதிய மாணவர் மன்றப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். ‘வேந்தர் நெறி’ என்ற காலாண்டிதழையும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றத்தின் ஆண்டு மலரையும், தமிழ் மன்ற மாணவர் மு.இராமமூர்த்தி எழுதிய ‘புத்தனைத் தேடும் தேநீர்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்ட பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் புரவலருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் பல்வேறு போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்கள்.