தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம்.
கடந்த சில வருடங்களாக தனித்துவமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.