HomeCinemaசன் டிவி'யின் யூடியூப் சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை! 

சன் டிவி’யின் யூடியூப் சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை! 

Published on

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் சன் டிவியின் யூ டியூப் சேனல் தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது.

https://www.youtube.com/@suntv

இந்த சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன.

இதற்கு மேலாக, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன.

பல வீடியோக்கள் பல வாரங்களாக டிரெண்டாகி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலும் இதில் குறிப்பிடத்தக்கவை. இதில் முன்னோடியான ‘அரபிக் குத்து’ பாடல் 700 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது, ‘காவாலா’ பாடல் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

இந்த சேனல் தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய ஃபாலோயர்ஸை இணைத்துக் கொண்டு, ஏற்கனவே இணைந்திருக்கும் ரசிகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்தி பயணிக்கிறது.

Latest articles

மூக்குத்தி அம்மன் 2 சினிமா விமர்சனம்

துஷ்ட சக்திகளை காலில் போட்டு மிதித்து, அரக்கர்களை அழிக்கிற அம்மன். இந்த ஒன்லைனில் ஏகப்பட்ட படங்கள் வந்தாச்சு; பார்த்தாச்சு. இந்த...

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் புதிய...

சண்முக பாண்டியன் நடிக்கும் வாணவேடிக்கை திரைப்படத்தில் வில்லனாக களமிறங்குகிறார் இயக்குநர் மோகன் ராஜா!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று ஆர்யா மற்றும் ஜெயம்...

ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், தெலுங்கு- தமிழ் திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி...

More like this